
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
பதிகங்கள்

மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.
English Meaning:
The Unholy is only in Search of FoodMantra, Tantra, Mahayoga and Jnana,
Bondage, and Mukti
—These they seek to know, the holy ones;
The Gurus unholy
Seek not them
Doubts they clear not;
Food are they in search of,
Verily blind are they.
Tamil Meaning:
சற்குரவராதற்கு உரியன பலவற்றை உடையோரும் தமது உபதேசத்தை உணரும் தகுதியில்லாதோர்க்கு அவர் வழியாகப் பெறப்படும் சில பயன் கருதி அவரை விலக்கமாட்டாராய் அவர்க்கு உபதேசம் செய்வாராயின், அவரும் அறியற்பாலனவற்றை அறியாத அறிவிலிகளாய், அசற்குரவராய் விடுவர்.Special Remark:
மந்திரம் முத்தி நெறிக்குரிய மந்திரங்கள். தந்திரம், வேதாகமங்களில் உள்ள ஞானப் பகுதிகள். மாயோகம் - சிவயோகம். ஞானம் - சிவஞானம். இவ்விடத்து உள்ள உம்மையை ``மந்திரம்`` முதலியவற்றோடும் கூட்டுக. ``பந்தம், வீடு`` என்றது, உண்மைப் பந்தத்தையும், உண்மை வீட்டையுமேயாம். `தரிசித்துத் தெளிவி யாதோர்` என இயைக்க. இவ்வினையெச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. `தரிசித்தும்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பார்ப்பவர் - அறியத்தக்கவர். `பார்ப்பவரை` என்னும் இரண்டன் உருபு உயர்திணைக்கண் தொகுக்கப்பட்டது. செய்யா - செய்து. ``ஊண்`` என்றது உபலக்கணம். ``அந்தகர்`` என்றது அகநோக்குப் பற்றி.இதனால், `சற்குரவர்க்கு ஆகாததொன்றினை உடையராயின் சற்குரவரும், அசற்குரவராவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage