ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும்,
    எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப;
    விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி
    ஒருகதி ராகில் உவாவது தானே.
  • 2. சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
    முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
    அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
    சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.
  • 3. ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி
    ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்;
    ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
    ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே.
  • 4. ஈரண்டத் தப்பால் இலங்கொளி அவ்வொளி
    ஓரண்டத் தார்க்கும் உணரா உணர்வு; அது
    பேரண்டத் துள்ளே பிறங்கொளி யாய்நின்ற
    ஆரண்டத் தக்கார்? அறியத்தக் காரே.
  • 5. ஒன்பதின் மேவி உலகம் அலம்வரும்;
    ஒன்பதும் ஈசன் இயல்பறி வார்இல்லை;
    முன்பதின் மேவி முதல்வன் அருள்இலார்
    இன்பம் இலார்; இருள் சூழநின் றாரே.