
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
பதிகங்கள்

எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும்,
எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப;
விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி
ஒருகதி ராகில் உவாவது தானே.
English Meaning:
Life`s Full Moon WithinThe luminous Sun dewy cool becomes
When Moon spreads its contending rays;
In the luminosity that commingling emanates,
My yearning Prana as a ray beams,
That verily is my life`s Full Moon.
Tamil Meaning:
பூர்ணிமை நாளில் மிக விளங்குகின்ற சந்திரன், தெறும் இயல்பினையுடைய கதிர்களையுடைய சூரியனுக்கு எதிரே நின்று தன் கதிர்களை வீசும் இயல்பு அமைந்திருக்குமாயின், அந்தச் சூரியனும் குளிர்ந்த கதிர்களை வீசுவோன் ஆகிவிடுவான். (அந்த அமைப்புத்தான் இல்லையே!) பிண்டாதித்தனுக்குள்ளே விளங்கு கின்ற எனது மனம் அவனால் ஓர் ஆதித்தனாயின், அது பின்பு பிண்டத் துள்ளே விளங்கும் சந்திர மண்டல்தினது அமுத தாரையால் பூர்ணிமை நாளில் தோன்றுகின்ற சந்திரனாகிவிடும்.Special Remark:
`அப்பொழுது எனதுமனம் அந்தப் பிண்டாதித் தனையும் வென்றுவிடும்` என்பதாம். `மனம் ஆதித்தனால் தூய்மை பெற்றதற்குப் பின் சந்திர மண்டலத்து அமுதத்தினாலும் தூய்மை பெறல் வேண்டும்; %EListen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage