
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
பதிகங்கள்

ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி
ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்;
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே.
English Meaning:
Full Moon WithinWith Kalas three of Sun, Moon and Fire
Arises the Kala from intermingling of their rays
Thus are they, Kalas Four;
When Sun, Moon and Fire mingle their rays,
Then is Full Moon within, know this.
Tamil Meaning:
யோக முறையில், சூரியன், அக்கினி, சந்திரன்` எனச் சொல்லப்படுகின்ற கலைகளோடு, அக்கினி செல்லும் வழியாகிய நடு நாடியும் `கலை` என்று சொல்லப்படும். ஆகவே, கலைகளாவன நான்காம். அவற்றுள் சூரிய கலை, நடு நாடி வழியாக மேற்செல்கின்ற அக்கினியோடு சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையின் அந்நிலையே யோகியர்க்கு, மேல், `உவா` எனக்குறித்த பூரணையாகும் என்று அறிமின்கள்.Special Remark:
அருக்கன் அனல் மதி ஆகும் கலையோடு இடை ஆகும். ஆகவே, `கலை நான்கு` எனலாம் என்பர்` என இயைத்துக் கொள்க. `அனலோடு கூடி` என உருபும் பயனும் உடன் விரிக்க. `மேற்கூறிய உலாவாம்` என்றதனால், `அந்நிலையை அடைந்தோரது மனம் ஆதித்தனாய்ப் பிண்டாதித்தனை வெல்லும்` என்பதுதானே பெறப், பட்டது, ``அறியும்`` என்பது முன்னிலைப் பன்மை ஏவல் வினை முற்று.இதனால், மேல் `உவா` எனப்பட்ட நிலை உளதாகுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage