
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
பதிகங்கள்

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.
English Meaning:
To See the Blending of the Rays of Sun and Moon is DivineWhen on Sun, Moon`s rays afore fall,
That in order is;
When on Sun, Moon`s rays beat,
Divine indeed;
In that mystic land
Where the two shafts mingle
They who the Light see,
Have Siva Himself become.
Tamil Meaning:
`சந்திர கலை` எனப்படும் இட நாடியில், `சூரிய கலை` எனப்படும் வல நாடிக் காற்று ஒடுங்கி இட நாடிக் காற்றே இயங்கினும் பின்னர் மாறி இயங்கும் காலமே சிவனைப் பூசித்தற்கு உரிய காலமும். (`ஆகவே, பூசை செய்வோர் அவ்வாறு செய்து கொள்க` என்பதாம்.) இனி அந்த இருவழியிலும் யோகம் ஆதலின், அவ்வாறு யோகம் செய்பவரே அந்தக்கரணம் தூய்மையாகப் பெற்றவர் ஆவர். அவரே பின்பு சிவயோகத்தால் சிவமாகி நிற்பர்.Special Remark:
பின்னர், ``பானுவில்`` என்றதனால் முன்னர், `சந்திரனில்` என அவ்விடத்தே ஏழாவது விரிக்கப்படும். `வரினும்` என்னும் எதிர்மறை உம்மை தொகுத்தலாயிற்று. அவ்வும்மையால், `சிவபூசையின்பொழுது பிராணன் அவ்வாறு இயங்குதல் கூடாது` என்பது பெறப்பட்டது. `ஏய் முறையில் ஆகும்` என இரண்டாம் அடி இறுதியில் உருபும் பயனிலையும் விரிக்க, ``உபய நிலம்`` என்றது, `இரண்டற்கும் பொதுவான இடம்` என நடு நாடியைக் குறித்தது. வருதல் வினையை மூன்றாம் அடியின் ஈற்றிலும் `வரின்` எனக் கூட்டுக. ``சிந்தை`` என்ற உபலக்கணம்.இதனால், மனம் ஆதித்தன் ஆகும் முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage