
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
பதிகங்கள்

ஈரண்டத் தப்பால் இலங்கொளி அவ்வொளி
ஓரண்டத் தார்க்கும் உணரா உணர்வு; அது
பேரண்டத் துள்ளே பிறங்கொளி யாய்நின்ற
ஆரண்டத் தக்கார்? அறியத்தக் காரே.
English Meaning:
The Vision of Ethereal Light WithinThe Light that shone beyond the orbs two,
Is a Light that none in any realm can perceive
It is a Light that shone piercing the Cosmic Universe;
Who can near it, who can perceive it!
Tamil Meaning:
கீழ்ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும், மேல் ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும் ஆகிய இரண்டு அண்டங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் விளங்குகின்ற ஓர் ஒளி பரமசிவன். அவ்வொளி எந்த உலகத்தார்க்கும் உணர இயலாத உணர் வாய் இருப்பது. எனினும் அஃது எல்லா உலகங்களிலும் விளங்குகின்ற எல்லா வகையான ஒளிகளிலும் உள்ளொளியாய் நிற்றலை அறியத் தக்கவர் யார்? அணுகத்தக்கவர் யார்? ஒருவரும் இலர்.Special Remark:
`இலங்கொளியாகிய அவ்வொளி` என்க. இரண்டாம் அடியிறுதியில் உள்ள `அது` என்பதை வேறுபிரித்து, ``நின்றது`` என்னும் பயனிலைக்கு எழுவாயாக்குக. ``நின்றது`` என்பது அத்தொழில்மேல் நின்றது. அண்டுதல் - அணுகுதல். முடிவில், மனம் ஆதித்தன் `ஆகப் பெற்றவரே அறியத் தக்கார்; அணுகத் தக்கார்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.``அண்டம் ஆரிரு ளூடு கலந்தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்`` l
என அருளிச் செய்ததையும் இங்கு நினைவு கூர்க.
இதனால், பரமசிவனது அருமையும், மன ஆதித்தனுக்கு ஆகின்ற அவனது எளிமையும் உணர்த்து முகத்தால் மன ஆதித்தனது பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage