ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே
    பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
    சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
    சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.
  • 2. காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
    காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
    காரிய காரண வாதனைப் பற்றறப்
    பாரண வும்உப சாந்தப் பரிசிதே.
  • 3. அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
    முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
    மன்னு பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத்
    தன்னின் வியாத்தி தனி உப சாந்தமே.
  • 4. ஆறா றமைந்தா றவத்தையுள் நீங்குதல்
    பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
    கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
    பேறாம் வியாத்தம் பிறங்குப சாந்தமே.
  • 5. வாய்ந்த உபசாந்தம் வாதனை உள்ளம் போய்
    ஏய்ந்த சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத்
    தோய்ந்து அறல் மோனச் சுகானு பவத்தொடே
    ஆய்ந்து அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.
  • 6. பரையின் பரஅப ரத்துடன் ஏகமாய்த்
    திரையின்இன் றாகிய தெண்புனல் போலவுற்(று)
    உரையுணர்ந்(து) ஆரமு தொக்க உணர்ந்துளோன்
    கரைகண் டவன் உரை யற்ற கணக்கிலே.