
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
பதிகங்கள்

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னு பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத்
தன்னின் வியாத்தி தனி உப சாந்தமே.
English Meaning:
Upasanta in Siva TuriyaIn (Jagrat) Turiya is Jiva`s purification of Self (Atma Suddhi)
In Turiya of the Jagratatita (Para Turiya)
Is Vision of Param;
That extending into Siva Turiya
Is Upasanta pervasive.
Tamil Meaning:
முன் மந்திரத்தில், ``பார்`` எனப்பட்ட அந்தப் பர துரியமே முற்றான ஆன்ம சுத்தி நிலையாகும். (எனினும், அதற்கு முன்னே `சிவதுரியம்` எனச் சொல்லப்பட்ட நின்மல துரியமே ஆன்ம சுத்தியாகச் சொல்லப்படுகின்றதன்றோ எனின்` பராவத்தையில் இனிது வெளிப்படுகின்ற பர சிவம், நின்மலாவத்தையில் ஓரளவாக வெளிப்படுதல் பற்றி அங்ஙனம் கூறப்படுகின்றது. ஆயினும் ஆன்மா பர சிவத்தோடு இரண்டறக் கலந்து உடனாய், வியாபகமாய் நிற்றல் ஒப்பற்ற உபசாந்தமாகிய பராவத்தையிலே யாகலின், பர துரியமே முற்றான ஆன்ம சுத்தியாம் என்க.Special Remark:
இதனை மெய்கண்ட நூல்கள் `ஆன்ம லாபம்` எனக் கூறும், ``சுத்தியும்`` என்னும் உம்மை சிறப்பு. முன்னியே - முன்பே கருதப்பட்ட சாக்கிராதீதம், நின்மல துரியாதீதம். `புரிவு` என்பது விகுதி குன்றி, முதனிலை மாத்திரமாய் நின்றது. புரிவு - செயல்; மேற்குறித்த ஆன்ம சுத்தி பரம் - பர சிவம் `காட்சியாவதனால்` எனவும், `உபசாந்தத்தில்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. தன்னில் - பரசிவத்தில், `வியாத்தி` என்றது வியாப்பியத்தை.இதனால் உபசாந்தமே முடிநிலைப் பேறாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage