
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
பதிகங்கள்

பரையின் பரஅப ரத்துடன் ஏகமாய்த்
திரையின்இன் றாகிய தெண்புனல் போலவுற்(று)
உரையுணர்ந்(து) ஆரமு தொக்க உணர்ந்துளோன்
கரைகண் டவன் உரை யற்ற கணக்கிலே.
English Meaning:
Shore BeyondMerged in One with Sakti and Siva,
As cool waters into wavy sea
And realizing Truth of Holy Word,
That is ambrosial sweet
Jiva reaches the Shore Beyond
That indeed defies speech.
Tamil Meaning:
பர சிவத்தின் சத்தியாகிய பராசத்தியின் தடத்த நிலை அதன் அபரமும், சொரூபநிலை அதன் பரமும் ஆகும். பெத்தத்தின் நீங்கிய உயிர் முதற்கண் நின்மலாவத்தையிலும், பராவத்தையில் அதீதத்திற்குக் கீழ்ப்பட்ட நான்கு நிலைகளிலும் பராசத்தியின் அபர நிலையைப் பொருந்தியும் அதீதத்தில் அதன் பர நிலையைப் பொருந்தியும் அலையற்றுள்ள கடல்நீர் போல யாதோர் அலைவுமின்றியிருக்கும். எனினும், அபர நிலையில் தேவாமுதத்தைப் பெற்று உண்பவன், அதனைத் தான் பெற்ற அருமை, அதன் சுவை மிகுதி, அதன் பயன் முதலியவற்றை உணர்ந்து நிற்பவன் போலவும், பர நிலையில் அவ்வாறு உணர்தல் இன்றி அந்த அமுதத்தின் சுவையிலே மூழ்கித் தன்னை மறந்து நிற்பவன் போலவும் இருப்பான். இவ்விருவரில் தன்னை மறந்து, உரையுணர்விறந்தவன் நிலையே முடிந்த நிலையாம்.Special Remark:
``உரையுணர் விறந்து நின்று உணர்வதோர் உணர்வே``9 என்றும் அருளிச் செய்தமையும் காண்க. சத்தியின் நிலையே சிவத்தின் நிலையாயினும் உயிர் சத்தி வழியாகவே சிவத்தையடைதல் பற்றி அங்ஙனம் அடையப்படும் நிலைகளைச் சத்திநிலைகளில் வைத்துக் கூறினார். ``உரை உணர்ந்து`` என்றது, `உரையையும், உணர்வையும் வேறாக நன்குணரும் நிலையில் நின்று` என்றபடி. ஒக்க உணர்தல் - முற்ற உணர்தல்; என்றது நன்குணர்தலை `உணர்ந்துளோன் உரையற்ற கணக்கில் கரை கண்டவன் ஆவான்` என முடிக்க. கணக்கு நிலை - கணக்கில் நிலையை அடைந்த பொழுது.இதனால், ஞானச் செய்திகளின் முடிநிலை அனுபவங்கள் கூறி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage