ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
    மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
    பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
    கள்ள மனமுடைக் கல்வியி லோரே.
  • 2. தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
    குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
    வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
    தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே. 
  • 3. உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
    கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை
    வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
    பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே. 
  • 4. அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
    செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள்
    மறியார் வளைக்க வருபுனற் கங்கைப்
    பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே. 
  • 5. கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
    உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர்
    திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
    றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
  • 6. கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
    கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
    கலந்தது நீர துடம்பில் வெளுக்கும்
    கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.