
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
பதிகங்கள்

கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
English Meaning:
They dropped gold in sea,And looked hard for it in pond;
Nothing indeed to match their folly;
Within you is Nandi,
Firm as rock of ages,
Yet they know Him not, and seek Him not
Lacking in Grace, they sure are.
Tamil Meaning:
சிவபெருமானை, `எங்குளன்` என்று தீர்த்தங்களில் வருந்தி முழுகிக் காணச் செல்பவரது செயல், கடலில் போகடப்பட்ட பொருளைக் குளத்தில் எடுக்கச் செல்பவரது செயல்போல்வதாம். அவரை ஒத்த அறிவிலிகள் பிறர் இலர். ஏனெனின், என்றும் ஒருபெற்றியனாகிய சிவபெருமான், தனது திருவருள் காரணமாக யாவர் உடலிலும் புகுந்து நிற்றலைச் சிறிதும் உணராமையால்.Special Remark:
``தேடுவார்`` என்றது ஆகு பெயர். `உடலிலே நிற்பவனை அவ்வுடலைப் பெற்றிருந்தும் பிறவிடத்துக் காண முயன்று வருந்துதல் அறியாமைப்பாலது` என்பதாம். உயிருள் நிற்பவனை உடலில் நிற்பவனாக ஓதியது, அவனை அதனுள் நிற்பவனாக நினைத்து யோகநெறியில் முயல்வார்க்கு அவன் அங்கு வெளிப்படுதல் பற்றி.இதனால், `தீர்த்தங்களில் முழுகுவார் மேற்கூறியவாறு தளியறிவினராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage