
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
பதிகங்கள்

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே.
English Meaning:
The Lord is within them,Yet they know Him not,
They of faith false;
Limitless the flow of their evil deeds;
Down down the deep drain it goes,
Never its destination to know.
Tamil Meaning:
அகத்தே உயிர்க்குயிராக உணரப்படும் ஒருவ னாகிய சிவபெருமானை அவ்வுள்ளத்துள் அன்பில்லாது ஆரவார மாத்திரையாகச் செய்யும் செயல்களால் ஒருவரும் அடைதல் இயலாது. ஆகவே, அன்புமிகும் வழியை நாடாமலே புறத்தில் தீர்த்தங்கள் பலவற்றை நாடிச்செல்பவர், தீவினையாகிய கிணற்றில் போகடப்பட்ட பத்தலேயாவர். அதனால், அவருள்ளத்தில் அவன் விளங்குவனோ!Special Remark:
``நாடிவிடும்`` என்பது ஒருசொல். `பத்தலாவர்` எனவும், `அவருள் உள்ளானே` எனவும் இருதொடராகக் கொள்க. பத்தல் - நீர்முகக்கும் கருவி. `அன்பின்றித் தீர்த்தத்தில் முழுகுதலாலே சிவனைப் பெறுதல் கூடுமாயின், நீர்ப்பத்தலும் சிவனை அடையும்` என நகையுண்டாகக் கூறியவாறு.இதனால், தீர்த்தங்களில் மூழ்குவார் மேற்கூறியவாறு தளியறிவினராதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage