
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
பதிகங்கள்

அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும்
சகமுக மாம் சத்தி ஆதனம் ஆகும்
செகமுக மாம் தெய்வ மேசிவம் ஆகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.
English Meaning:
Lord`s Abode Inside the BodyThe Adharas six are His pedestal inward
The Sakti pervasive is His Throne
The universal God within is Siva Himself;
Thus it is,
For these who inward reflect and know.
Tamil Meaning:
புற ஆரவாரங்களை விடுத்து, அகநோக்குக் கொண்டு நோக்குகின்ற ஞான குரவர்கட்கு, அனைத்திற்கும் அடி நிலையாகிய அந்த அக நோக்கு உணர்வே சிவன் எழுந்தருளி யிருக்கும் ஆசனமாகும். அந்த அகநோக்கு உணர்வு. நிலை திரியாதே மாணாக்கர்பொருட்டு உலகை நோக்குகின்ற அதுவே சிவன் கொள்கின்ற திருவுருவமாகும். அங்ஙனம் நோக்கி மாணாக்கர்க்குச் செய்யும் அருட் செயல்களே அத்திருவுருவத்தில் உள்ள சிவபெருமானாகும்.Special Remark:
வழிபாடு, `ஆசனம், மூர்த்தி, மூர்த்திமான்` என்னும் மூன்றும் அமையச் செய்யப்படும் ஆகலின் அம்மூன்றும் குரு மூர்த்திகளது அருட்செயலில் அமைதல் காட்டியபடி. `ஞானகுரு தம் மாணாக்கர்க்கு அருள்புரியுமிடடத்துத் தமது நிலையை இவ்வாறு பாவித்து நின்றே புரிதலால், அவர் செயல் அவருக்குச் சிவப் பணியாயும், ஏனையோர்க்குத் திருவருட் செயலாயும் அமைந்து பயன் தருகின்றன` என்பதாம்.`அகமுமாம் ஆதாரம் பீடம் ஆம்` என்க.
ஆதனம் - ஆசனம். என்றது, இங்கு, உறையும் இடமாகிய உருவத்தைக் குறித்தது. சிவனுக்குச் சத்தியே திருமேனியாதல் அறிக வழிபாட்டிற்கு உரிய வகையில் கட்புலனாகியிருக்கும் நனி நுண்ணுடம்பு சிவன் அவ்வுடம்புகளின் உள்ளிருக்கும் உயிர் ஆதலின், நனி நுண்ணுடம்பையே இங்குக் கூறினார். சத்தி வெளிப்படும்பொழுது சிவமும் உடன் வெளிப்பட்டு நிற்கும் ஆதலின் ``சகமுமாம் சத்தி`` என்றும், ``தெய்வம்`` என்றது, திவ்வியமாகிய செயல்களை.
இதனால், ஞானகுருவினது பாவனை முதிர்ச்சியால் அவர் சிவமாய் நிற்றலின் அவரது மடம் சிவசொரூபமாயிற்று` என்பது விளக்கப்பட்டது.
ஆறு, ஏழாந் தந்திரங்களில் குருவைப் பற்றிக் கூறினா ராயினும் அங்குக் குருமடத்தின் சிறப்புப் பற்றிக் கூற இயைபில் லாமையால், அவற்றின் ஒழிபாக இதனைக் இங்குக் கூறினார். இது முன்னைத் தந்திரத்து இறுதிக்கண் நின்ற `பத்தி யுடைமை` அதிகாரத்தோடு இயைந்து நிற்றலும் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage