
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
பதிகங்கள்

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரிய சிறப்பில்லி எம்மிறை
ஓடும் உலகுயி ராகிநின் றானே.
English Meaning:
Great Way of SeekingHaving discovered the Great Way of seeking
The flower-decked feet of Siva I reached within;
Beyond seeking is He;
Greatness indeed is where He resides;
He stood as life of the revolving world.
Tamil Meaning:
ஞானமாகிய கடலில் மூழ்குதற்கு உரிய பெரிய துறையாகிய குருமடத்தைச் சென்று நான் தரிசித்தபின்பு, எல்லா உயிர்களும் சென்று சேரும் இடமாகிய சிவனது, அப்பொழுது கொய்த தாமரை மலர்போலும் சிவந்த திருவடிகள் தேடிக் காண்பதற்கு அரியனவாகவே இருக்க, திருமடத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ள சிவகுருவே எங்கட்குச் சிவனாய் இயங்குகின்ற உலகம், உயிர் எங்கும் நிறைந்து நிற்கின்றான்.Special Remark:
``பெருந்துறை`` என்றது, குறிப்புருவகம். `பெரிதாகிய கடலில் சென்று ஆடுதல், அதற்குரிய துறைவழியாக அன்றி இயலாத வாறு போல, அகண்ட ஞானத்தைப் பெறுதல் அதற்குரிய குருமடத்தில் சென்றன்றி இயலாது` என்பது தோன்ற இவ்வாறு உருவகித்தார். ``பெருந்துறை`` என்னும் சொற் குறிப்பால், `இந்நாயனார் ஆளுடைய அடிகள் காலத்திற்குப் பின் இதனை அருளிச்செய்தார்` எனக் கருதலாம்.``பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன்``3
என அடிகளைச் சிவப்பிரகாசர் போற்றினார். `ஞானத்தைப் பெற்றவர்களுக்கு அதனை அளித்தருளிய ஞானகுருவே சிவன்` என்பதை, ``குருவே சிவம் எனக்கூறினன் நந்தி``88? என நாயனார் முதற்கண் கூறியதுபோலவே, அருணந்தி தேவரும்,
``பரம்பிரமம் இவன்என்றும், பரசிவன்றான் என்றும்,
பரஞானம் இவன்என்றும், பராபரன்றான் என்றும்,
அரன்தரும்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும்
அருட்குருவை வழிபட``9
எனக் கூறினமை அறியற்பாலது. இவ்வாற்றால், `சிவனது சேவடி தேடி அடைய அரியன அரியனவாகவே இருக்க, நாங்கள் குருமடத்தில் குருவினது சேவடியையே சிவனடியாக அடைந்து விட்டோம்` என்றார். சிறப்பு இல் - ஞானம் நிலையம். இகர ஈறு, அதனையுடைய குருமூர்த்தியை உணர்த்திற்று. ``கைகூடும் சிவனது ... ... ... தேட அரிய`` என்பதை இடைப் பிறவரலாக்கி, இம் மந்திரத்தை வினை முடிபு செய்க. `அரிய ஆக` என ஆக்கமும், `எம்மிறையும், உலகுயிராகியும்` என எண்ணும்மைகளும் விரிக்க.
இதனால் ஞானிகட்குக் குருமடம் புகலிடமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage