
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
பதிகங்கள்

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.
English Meaning:
Revelation of Lord`s AbodeI shall reveal where He is seated;
And where His mountain is;
I shall reveal where His retreat-cave is
And where that is located;
I shall reveal where His Adharas (triple) are;
And the forest where He is
All these eight I shall reveal
To denizens of world here below.
Tamil Meaning:
`சிவன் எழுந்தருளியிருக்கின்ற இருக்கை, கயிலாய மலை, ஞானிகளது உள்ளம் என்பன. முறையே திருமடத்தில் உள்ள பீடமும், மடலாயமும், திருநந்தவனமுமே` என்று நான், பன்னிரு பகுதியாகிய, பெரிய தமிழ்நாட்டு மக்கட்கு உறுதியாகக் கூறுவேன்.Special Remark:
`சிவனுடைய` என்பது முன் மந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. ``இயம்புவன்`` என்பது மீள மீள வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. மடம் முதலிய மூன்றினையும் ஆசனம் முதலிய மூன்றதனோடும் நிரல் நிறையாக இயைக்க. ``ஆதாரம்`` எனப்பின்னர் வருதலால், ``படம்`` என்பது பீடத்தைக் குறித்தது. தானியாகு பெயராக, மடத்தையே `பீடம்` என வழங்குதல் உண்மையையும் இங்கு நோக்குக. நந்தவனம் மலர்பொதுளி விளங்குதலால், அது ஞானிகளது உள்ளமாயிற்று. அதன் மணம், ஞான மணமாம். ஈராறு நிலம் - தமிழ்ப் பன்னிரு நாடுகள்.``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்``8
என்றமையால், தொல்காப்பியர்க்கு, இவைகளைக் கொடுந்தமிழ் நாடாகக் கூறுதல் கருத்தாகாமை விளங்கும்.
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே``3
என நாயனாரே பாயிரத்துட் கூறியவாறு தமிழ் மக்கட்கே தாம் நூல் செய்கின்றார் ஆகலானும், ``தமிழ் மண்டலம் ஐந்து`` எனத் தமிழ்நாடு முழுதையும் நோக்கினார் ஆகலானும் தமிழ் மக்களையே குறித்தார். இனி, `ஈராறும், இரண்டும் ஆகிய நிலம்` என வைத்து,`பதினான்கு உலகங்களில் உள்ளார்க்கும் இயம்புவன்` என்றும் உரைப்பர். `அஃது எத்துணைப் பொருத்தம் உடையது` என அறிந்துகொள்க.
இதனால், `குருமடத்தில் உள்ள பீடம் முதலியன சிவனது பீடம் முதலியனவேயாம் சிறப்புடையன` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage