
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்
பதிகங்கள்

ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.
English Meaning:
Who Pursued False FaithsThey wake not to Inner Light of Aum within,
And joy not in ego-effaced bliss ensuing
They wot not of approaching death,
They seek not the end of recurring birth,
Lo! they pursued the unending path of contending faiths,
And stood forlorn, for ever lost in faith false.
Tamil Meaning:
பிரணவத்தின் உள்ளே விளங்குவதாகிய ஒளியை அறிவினுள்ளே வெளிப்படுதலால் உண்டாகின்ற அனுபவத்தை அடையப் பெறார்; இறப்பு என்றாயினும் ஒருநாள் உளதாதலை நினையார்; அதனை நினைந்து, மேலும் பிறந்து இறத்தலை ஒழியும் நெறியைப் பற்றார்; வாளா சமயத்தை மட்டும் பற்றிக்கொண்டு அதன் பயனைப் பெறாதொழிகின்றார்கள் மக்கள்.Special Remark:
சமயத்தில் நிற்பார் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை எதிர்மறை முகத்தான் உணர்த்தி, அவற்றையுடை யோரே சமயத்தின் பயனைப் பெறுவர் எனக் கூறியவாறு. `உறுதலான்` என்பதன் திரிபாகிய ``உற்று`` என்பது ``கைகூடார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது.இதனால், சமய ஒழுக்கம் இல்லாத சமயிகள் சமயத்தின் பயனை எய்தாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage