
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்
பதிகங்கள்

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.
English Meaning:
Worship Siva and Siva BecomeThey who bow their head at the Feet of Lord
Of spreading matted locks and Konrai bloom bedecked,
They shall, like unto Him, become;
But they that yearn not for Him in constant eagerness
Shall be in sorrow immersed,
Sighing eternal here below.
Tamil Meaning:
நன்மை அமைந்த சிவபெருமானது திருவடிகளை எப்போதும் தாங்கி நிற்கின்ற மனத்தை உடையவர் இப்பூமியில் தமக்குத் தாமே ஒப்பாகும் பெருமையை உடையவராவார். அவ்வாறின்றி அவற்றை எஞ்ஞான்றும் நீங்கி நின்ற வண்ணமாய் ஒருபோதும் நினையாதவர் உலகில் விரும்பியது ஒன்றனையும் பெறாது வாளா இருந்து துன்புறுவார்கள்.Special Remark:
`தமக்கு நேர் தாமேயாவர்` என்பதனை, ``நேர் ஒப்பர்`` என்றார். இது, செல்வம் முதலிய எல்லாவற்றாலுமாம். ஏங்குதல் - விருப்பம் நிறைவுறாமையால் அதனையே நினைத்துக் குறையுறுதல். இதனை `ஏக்கறுதல்` எனவும் கூறுவர். `இரந்தழுவார்` எனப்பாடம் ஓதி, ``இரத்தலை மேற்கொண்டு அதனானும் நிரம்பப் பெறாது துன்புறுவர்`` என்று உரைப்பினுமாம்.``வானகம் ஆண்டுமந் தாகினி ஆடினந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும், சிதவல் சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போரும் - கனகவண்ணப்
பானிற நீற்றற் கடியரும், அல்லாப் படிறருமே`` 1
என்றாற்போல்வனவற்றையும் இங்கு நினைக.
இதனால், சிவனடியை நினைதல் நினையாமைகளே ஒழுக்கமும், இழுக்கமுமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage