
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
பதிகங்கள்

சாற்றரி தாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.
English Meaning:
When This Truth Dawns Then is Union in SivaWhen this Truth, beyond words, you perceive
The Siva Tattvas five bend below;
The light of Supreme Jnana dawns,
Illumines the Soul`s path
To the Finite goal
Of Sayujya union in Lord.
Tamil Meaning:
சொல்ல இயலாத மேற்குறித்த உண்மை நிலை கிடைக்கப்பெற்றால், பொறுத்தற்கரிய ஐம்புலன்களும் தம் குறும்புகள் நீங்கி அடங்கிவிடும். பாசஞான பசு ஞானங்களைக் கடந்து மேலாய் விளங்கும் பதிஞானம் நொந்தா விளக்குபோல நிலைபெற்று ஒளிரும். அதன் பயனாகப் பின்னர்ப் பதிப்பொருள், மேலான சாயுச்சியமாய்க் கிடைக்கும்.Special Remark:
`அத் தத்துவம்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. பால் -அப்பால்.இதனால், கடுஞ் சுத்த சைவத்தின் அருமையும், பயனும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage