
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
பதிகங்கள்

சுத்தச் சிவனுறை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாம்மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரே சுத்த சைவரே.
English Meaning:
Goal of Suddha Saivas is to be One With SivaThey tarry not in the Pure Maya Sphere of Siva Tattvas
There they but attain the status of Gods
But that as a spring board
Their Soul reaches farther out to Siva Him-self,
And merging in His union, Self-effacing,
Themselves become Immaculate Siva
They, forsooth, are Suddha Saivas.
Tamil Meaning:
தடத்த சிவன் எழுந்தருளியிருக்கின்ற சுத்தமாகிய சிவலோகத்தை அடையினும் அங்குப் பற்றுக் கொள்ளாமல் `முத்தர்` என்னும் சொல்லுக்குப் பொருளும் முத்தியாகிய நிலத்திற்கு வித்தும் ஆகியிருக்கின்ற அந்தத் தகுதியையுடைய முத்தான்மா ஆகின்றவர் அவ்வாற்றால் சிவனைச் சார்ந்து, அதனால், மூலமலம் பற்றறக் கழிந்தவழிச் சொரூப சிவனோடு இரண்டறக் கலப்பர். அங்ஙனம் கலப்பவரே உண்மைச் சுத்த சைவராவர்.Special Remark:
`அதனால்` வேடம் முதலியவற்றை மேற்கொள்ளாமலே அத்தகுதியையுடையராய் இருப்பர் கடுஞ்சுத்த சைவர்` என்பது குறிப்பெச்சம் `சுத்தத்தானம்` என இயையும். `சிவனுரை` என்பது பாடமன்று. ``மூலம்`` என்பதை, அற்றால் என்பதற்கு முன் கூட்டி உரைக்க. அத்தகைய ஆன்மா நிலையை அடைந்தவரை ``ஆன்ம`` என்றே கூறியது ஆகுபெயர். இஃது இயற்கையில் அஃறிணை இயற் பெயராய்ப் பன்மைகுறித்து நின்று பின் ஆகுபெயர் ஆயிற்று. `சுத்த சிவமாவர்; அவரே சுத்த சைவர்` என இருசொல் நீர்மைப்படுத்து உரைக்க. `சிவலோகத்தை அடைந்தாரும் பற்று நீங்காதவழி மீள நிலத் திற்பிறப்பர்` என்பதும், `பற்றற்றிருப்பின், அவ் விடத்திற்றானே சிவன் மூன்னின்று அவரை முத்தியிற் சேர்த்துவன் என்பதும் சிவாகம உண்மையாதலின் 1 அவரையே ``முத்தர் பதப் பொருள்`` என்றும் ``முத்திக்கு வித்து`` என்றுங் கூறினார். திருவள்ளுவநாயனாரும் இத்தகையோரை, ``வரன் என்னும் வைப்பிற் கோர் வித்து`` 2 என அருளிச்செய்தார்.இதனால், கடுஞ் சுத்தசைவரது சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage