
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
பதிகங்கள்

உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே.
English Meaning:
Teachings of Siddhanta SchoolThe five Tattvas that constitute the body,
The thirty more that together constitute them
And the one Tattva that is yet beyond Pure Maya,
All these they transcend;
The thick layers of primal bondage they dissolve
And of certain, realize the Self
That the way of Siddhantins true.
Tamil Meaning:
தூல சூக்கும பர உடம்புகளாய் நிற்கும் முப்பத் தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிவான நிலையை யுடைய பெரிய மாயையாம். அவற்றை ஆன்மா நீக்கின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தைக் கழுவித் தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும். அவ்வாறு எய்துவதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.Special Remark:
``உடலான`` என்பது ``ஐந்தும், ஓராறும்`` என்னும் இரண்டோடே பொருந்தி நின்றது. அவற்றிற்கு மேல் உள்ள ஐந்தும் சுத்த தத்துவங்கள். அவை ஆன்மாக்களுக்கு உடம்பாய் வருதல் இல்லை. மடல் - விரிவு. `படலம்` என்பது. அம் குறைந்து நின்றது. கேவல பாசம் - ஆன்மாவோடு இயல்பாக ஒட்டி ஒன்றாய் நிற்கும் பாசம்; ஆணவ மலம், உள்ளம் - ஆன்மா. ஆன்மா என்றும் சிவ வியா பகத்தில் உள்ளதே யாகலின், அந்நிலை தோன்றாதவாறு மறைத்துள்ள ஆணவம் நீங்கியவுடன் தனது இயற்கை நிலையை எய்தலாவது சிவ வியாபகத்தில் இருத்தலை உணர்ந்து இன்புறுதலேயாதல் அறிக. ``சித்தாந்தம்`` என்பதே சுத்த சைவம் ஆதலின், `அந்த நெறியில் கடுஞ்சுத்தசைவர் இவ்வாறு நிற்பர்` எனக் கூறியவாறு.இதனால், மேற்கூறிய அரு நெறியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage