
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
பதிகங்கள்

வேடங் கடந்த விகிர்தன்றன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.
English Meaning:
Suddha Saivam DefinedThey are not for outward form and attire,
They are not for pomp and ceremony,
Uprooting all bond and desire,
Abiding in the Immaculate Lord,
They bring to dire destruction,
The Soul`s egoity and its bondage beginningless
Thus they onward leap,
With Siva`s light suffused
—They, of Suddha Saiva Way.
Tamil Meaning:
துறவுக் கோலம் இன்றியே, ஆசையாகிய தளையையும் அறுத்தெறிந்து, துன்பத்தொடு படுதற்கு ஏதுவாகிய மலங்களாகின்ற பசுத்துவம் இல்லையாம்படி அடித்துப் போக்குகின்ற சிவஞானச் செயலரே கடுஞ்சுத்த சைவராவர்.Special Remark:
இல்லம் துறந்து, எங்கும் செல்பவரே துறவுக் கோலத்தை உடையராவர் ஆகலின், ``வேடங் கடந்து`` என்றது இல்லந்துறத் தலாகிய புறத்துறவு இன்றி, அகத் துறவு மாத்திரம். உடையராதலைக் குறித்தது. இவர் சிவனிடத்தே அடங்கியிருத்தல், அலை ஒழியாத கடலில் அலைவின்றி மூழ்குதலோடு ஒக்கும் அருமை யுடைத்தாதல் அறிக. ஆடம்பரம் - ஆரவாரம். வேடங்கடந்தமை முன்னே கூறப்பட்டமையின், இது தமது நிலையைப் பிறர் அறிதற்கு ஏதுவாம் பேச்சினைக் குறிக்கும். இது முற்கூறியதினும் அருமை யுடையதாம். போதகர் - போதத்தை விடாதே செயற்படுவோர். ``சுத்தசைவர்`` என்றது, அதிகாரத்தால் கடுஞ்சுத்த சைவரையாயிற்று.இதனால், `கடுஞ் சுத்த சைவ நிலை இது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage