
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
பதிகங்கள்

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம்
தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால்
தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.
English Meaning:
I and You Difference EffacedI sought Him in terms of I and You
But He that knows not I from You
Taught me the truth, ``I`` indeed is ``You``
And now I talk of I and You.
Tamil Meaning:
`நான் எங்கே யிருக்கின்றேன், `தத்` பதப் பொருளாகிய பரம் எங்கே உள்ளது` என்று நான் தேடி அலையும் நிலையில், `தான் அதோ உள்ளது, நான் இதோ உள்ளேன்` என வேறு வேறு கண்டு எண்ணுமாறு `இரண்டு` என்னும் எண்ணிற்கே இடம் இல்லாது, என்னுள் ஒன்றாயே நிற்கின்ற அது எனது அலைவுக்கு இரங்கி வெளிப்பட்டு வந்து, தான் என்றுமே நானாய் - என் உயிருக் குயிராய் - ஒன்றியிருக்கிற உண்மையை உணர்த்தினமையால், நான் இப்பொழுது `தான்` என்று அதனைத் தனியாகவும், `நான்` என்று என்னைத் தனியாகவும் எண்ணிச் சொல்லும் தன்மை இலேனாயினேன்.Special Remark:
`தற்பதம்` என்பது பாடமாயின், ``பதம்`` என்பதைச் சொல்லாகு பெயராகக் கொண்டு உரைக்க.``தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்`` 3
என்றதும் இங்கு நினைக்கத் தக்கது.
இதனால், புறக்காட்சியற்று அகக் காட்சியில் உறைத்து நிற்றல் கடுஞ் சுத்த சைவமாதல், தம்நிலை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage