
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
பதிகங்கள்

சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.
English Meaning:
Utter not falsehood in holy Guru`s presence;Then will goodness and wisdom depart;
Forgotten will be
The time-honoured path of righteousness,
And all else that to prosperity leads;
The land a prey to famine falls.
Tamil Meaning:
ஞான நெறியை உணர்த்துகின்ற ஞானகுருவின் திருமுன்பில், `பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்` என்னும் தீய சொற்கள் எவர் வாய்வழியாக நிகழினும் உலகில் நன்னெறி அழிந்து, மெய்யுணர்வும் இல்லாதொழியும். தொன்றுதொட்டு வரும் உலகியல் துறைகளும், மெய்ந்நெறித் துறைகளும் மக்களால் மறக்கப்பட்டுப் பல சமயங்களும் கெட, நாட்டில் பஞ்சமும் உண்டாகும்.Special Remark:
ஞானநெறி, `சன்மார்க்கம்` என வழங்கப்படுதலை அறிந்துகொள்க. ``பொய்`` என்றது உபலக்கணம்.இதனால், ஞான குருவை இகழ்தல் பெரிதும் தீமை தருவதாம் என, அது விலக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage