
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
பதிகங்கள்

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
English Meaning:
The Guru taught the wisdomOf One-Letter mantra (Aum);
He who speaks derisive of Him
Will be born a lowly cur;
And having led a dog`s life for a Yuga entire,
He will be a worm born;
And then to dust shall be consigned.
Tamil Meaning:
கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.Special Remark:
``பத்தினிகள்`` என்பதில் விகுதி தொகுத்தலாயிற்று. தத்துவ ஞானம் நூலானும், அநுபவத்தானும் வருவது. பத்தினிகள் முதலிய மூவரும் நேரே குரவராகாவிடினும், தமது ஒழுக்கத்தால் உலகம் நன்னெறி நிற்கச் செய்தலால் உலக ஆசிரியராதல் பற்றி அவர்கட்குத் தீங்கு செய்வது உலகிற்கே தீங்கு செய்வதாய் முடிதலின், அதனால் விளையும் தீமை பெரிதாயிற்று. சதாநந்தி - சதா ஆநந்தி; எப்பொழுதும் இன்பம் உற்றிருப்பவர்.இவை இரண்டு திருமந்திரங்களாலும், உபதேச குரவரையே யன்றிப் பிற குரவரை இகழ்தலும் கூடா என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage