
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 13. நல்குரவு
பதிகங்கள்

அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே.
English Meaning:
Lord Alone is Refuge from Harrying BirthsHim the Six tastes harried
Him the Five senses maligned, countless miseries giving,
Him Karma tortured through birth after birth pursuing–
Thus he learned to despise life–in the Lord alone refuge finding.
Tamil Meaning:
ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக்கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல; பல. (இவற்றை யெல்லாம் நோக்கி) நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.Special Remark:
`ஆனினம் ஆறினும்` என மாற்றுக. `ஆறினும், ஐவரும்` (குறள் 43)என்றவை தொகைக் குறிப்பு. நல்லன, தீயனவற்றைப் பகுத்துணரும் அறிவும் ஐவரால் அடர்க்கப்படுதலின் அனைத் துயிரையும் வேடரால் கவரப்படுகின்ற பசுக்கூட்டமாகக் கூறினார். `ஆனினம்` என்னாது, `மானினம்` என ஓதுதலும் ஆம். `அறுத்தல்` `வேண்டி நின்றானே` என்பன பாடம் அல்ல. `ஈசனையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதனால், தேவர் வாழ்க்கையும் முற்கூறிய பசுவினங்களின் வாழ்க்கையோடு ஒத்ததாதல் குறிக்கப் பட்டதாம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage