
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 2. இயமம்
- மூன்றாம் தந்திரம் - 3. நியமம்
- மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
- மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
- மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
- மூன்றாம் தந்திரம் - 9. சமாதி
- மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
- மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி
- மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
- மூன்றாம் தந்திரம் - 13. காரியசித்தி
- மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
- மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
- மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
- மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
- மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
- மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்
- மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை
- மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்
Paadal
-
1. உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே.
-
2. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.
-
3. நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
-
4. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.
அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.
-
5. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.