
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 2. இயமம்
- மூன்றாம் தந்திரம் - 3. நியமம்
- மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
- மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
- மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
- மூன்றாம் தந்திரம் - 9. சமாதி
- மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
- மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி
- மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
- மூன்றாம் தந்திரம் - 13. காரியசித்தி
- மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
- மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
- மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
- மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
- மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
- மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்
- மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை
- மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்
Paadal
-
1. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.
-
2. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.
-
3. செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.
-
4. மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
-
5. உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.
-
6. நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.