
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 2. இயமம்
- மூன்றாம் தந்திரம் - 3. நியமம்
- மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
- மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
- மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
- மூன்றாம் தந்திரம் - 9. சமாதி
- மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
- மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி
- மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
- மூன்றாம் தந்திரம் - 13. காரியசித்தி
- மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
- மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
- மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
- மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
- மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
- மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்
- மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை
- மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்
Paadal
-
1. காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே.
-
10. சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொ ளீரே.
-
11. ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
-
12. ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே.
-
2. காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே
-
3. நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே.
-
4. புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.
-
5. இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒலிக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே.
-
6. சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.
-
7. கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே.
-
8. தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே.
-
9. திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற ஆயுவைச் சேர்தலு மாமே.