ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உரைத்தன வற்கரி ஒன்று முடிய
    நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
    பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
    நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.
  • 2. செய்த இயம நியமஞ் சமாதிசென்
    றுய்யப் பராசத்தி உத்தர பூருவம்
    எய்தக் கவச நியாசங்கள் முத்திரை
    எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே. 
  • 3. அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
    தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
    நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
    புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே. 
  • 4. இயம நியமமே எண்ணிலா ஆதனம்
    நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
    சயமிகு தாரணை தியானஞ் சமாதி
    அயமுறும் அட்டாங்க மாவது மாமே.