
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
பதிகங்கள்

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.
English Meaning:
Of difficult vast to expoundIs the Science of Breath;
Closing nostril alternate
And counting time in measure appropriate
Thus did Nandi reveal at length
The eight-fold science of yoga great—
Yama, Niyama and the rest.
Tamil Meaning:
கணிநூலில் (சோதிட நூலில்) சொல்லப்பட்ட வரிசையான பன்னிரண்டு இராசிகளையும் யாடும் (மேடமும்), அரிமாவும் (சிங்கமும்) முதலாய் நிற்பத் தொடங்கி முடியும் வகைகளில் முறையானே எண்ணி யோக உறுப்புக்கள் எட்டனையும் முன்பு உணர்த்தியருளிய நந்திபெருமான், அவைகளில் முறையான விலக்கு விதிகளை அருளிச் செய்தார்.Special Remark:
வற்கு - யாடு. பன்னிரண்டு இராசிகளை எண்ணும் பொழுது மேடம் முதலாக எண்ணுதலே யன்றி, சிலவற்றிற்குச் சிங்கம் முதலாக எண்ணுதலும் உளதாதலின், ``வற்கு அரி ஒன்று முடிய`` என்றார். ஒன்று முடிய - ஒன்றாகத் தொடங்கி முடிய. ``நிரைத்த இராசி`` என்றதனை, ``உரைத்தன`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``இராசியை எண்ணி`` என்றது, யோக நூற்குக் கணிநூல் துணையாக நிற்றல் கூறியவாறு. பிராசாதம் - யோகம்; அது, `பிரச்சதம்` என மருவி நின்றது. யோக உறுப்புக்கள் எட்டு, பின்னர்க் கூறப்படும். `இயமம், நியமம்` என்பன இங்கு யோக உறுப்புக்களைக் குறியாது `விலக்கு, விதி` என்னும் பொருளவாய் நின்றன.இதனால், யோகப் பயிற்சி, கணிநூல் கூறும் கால இயல்பை நோக்கி அதற்கேற்பச் செய்யப்படுதலும், யோகத்தின் உறுப்புக்கள் எட்டாதலும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage