
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
பதிகங்கள்

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்தக் கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.
English Meaning:
I shall reveal herein,The ways of Yama and Niyama,
The secret of Kavacha, Nyasa and Mudra
The paths to reach the Samadhi State;
And how Kundalini Sakti courses upward
And reaches the thousand petalled lotus in the cranium.
Tamil Meaning:
மேற்கூறியவாறு நந்திபெருமான் அருளிச்செய்த விலக்கு விதிகளால் சமாதி நிலையை அடைந்து யாவரும் உய்தற் பொருட்டு, ஞானம் இறுதித் தந்திரங்களில் வர நிறுத்தி, முன்னே உள்ள சில தந்திரங்களில் கிரியைகளாகிய கவசம், நியாசம், முத்திரை முதலியவைகளுடன் யோக நெறியையும் கூறுவேன். `இயம நியமத்தால்` என உருபு விரிக்க.Special Remark:
`உத்தரம் பராசத்தி எய்த, பூருவம் கவசம் நியாசங்கள் முத்திரை இந்நெறி எய்த உரைசெய்வன்` எனக் கூட்டுக. ஞானமாவது திருவருளே யாதலின், ``பராசத்தி`` என்றார். `முத்திரையோடு` என உருபு விரிக்க. ``இந்நிலை`` என்றது, மேல் `பிரச்சதம்` எனக்கூறிய யோகத்தை.இதனால், சரியை கிரியா யோகங்களாகிய தவங்கள் ஞானத்திற்குச் சாதனமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage