ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
    எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
    சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
    அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.
  • 2. நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம்
    நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
    நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி
    நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.
  • 3. சிவாய நம`எனச் சித்த ஒருக்கி
    அவாய3ம் அறவே அடிமைய தாகிச்
    சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
    அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.
  • 4. பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
    விழித்தங் குறங்கும் வினையறி வார் இல்லை
    எழுத்தறி வோம்என் றுரைப்பார்கள் ஏதர்
    எழுத்தை அழுத்தும் எழுத்தறி யாரே.