
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
- ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
- ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
- ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
- ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
- ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
- ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்
- ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்
- ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
- ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி
- ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
- ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
- ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
Paadal
-
1. அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.
-
2. பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.
-
3. `அங்குசம்` என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.
-
4. ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி
மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.
-
5. சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும்
சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.
-
6. மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே.