ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. இணையார் திருவடி ஏத்தும்சீ ரங்கத்
    திணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
    குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
    தணைவாம் சரியை கிரியையி னார்க்கே.
  • 2. காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
    தோதுந் திருமேனி உட்கட் டிரண்டுடன்
    சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
    ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.
  • 3. கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
    கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
    கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா
    கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.
  • 4. ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
    மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
    ஏனை நிலமும் எழுதா மறையீறும்
    கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.