
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்
பதிகங்கள்

இணையார் திருவடி ஏத்தும்சீ ரங்கத்
திணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாம் சரியை கிரியையி னார்க்கே.
English Meaning:
Path of Chariya-KriyaThey who walk the twin paths of Chariya and Kriya
They ever praise the twin Feet of Lord;
On their limbs they wear holy emblems
The twin rings in ear lobes
The twin rudraksha garland around the neck,
And adopt the twin Mudra`
All, in amiable constancy.
Tamil Meaning:
சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர்க்குச் சிவனது இரண்டு திருவடிகளைத் தாம் வணங்குதற்குரிய கோலமாக உடம்பில் ஒன்று இரண்டாய்ப் பிணைந்த இருகுழைகள். இரண்டாகப் பொருந்திய முத்திரைகள், இரட்டை வடமாக அமைந்த கண்ட சரமும் ஆகியவை குறையாது பொருந்துதற்கு உரியன.Special Remark:
சீர் - அழகு. அஃது அதனைத் தருவதாகிய கோலத்தைக் குறித்தது. இணையார் குழையை, `ஆறுகட்டியும், சுந்தரவேடமும்` என்றும், இவை `ஆசிரியர்க்கு உரியன` என்றும் கூறுவர். `இவ்வாசிரியர் கிரியா குரவரே` என்பது இம் மந்திரத்தாற் பெறுதும். இருமுத்திரைகளா வனவற்றை, `இடபக்குறியும் சூலக் குறியும்` எனத் திருநாவுக் கரசரது வரலாறு பற்றிக் கூறுதல் கூடும். அவன் சமண் சமயஞ் சார்ந்திருந்த மாசு தீரவே அவற்றை வேண்டிப் பெற்றமையால், அவை சமய விசேட தீக்கைகட்கு உரியனவாக இங்குக் கூறப்பட்டன எனலாம். ``குன்றாது அணைவாம்`` என்றது, `தவறாது பொருந்துவது` என்றபடி. எனவே, சுத்த சைவர்க்கு அவை இலவாயினும் குற்றமின் றாதல் அறியப்படும்.இதனால், `அசுத்த சைவருள் ஒருசாரார் இவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage