
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்
பதிகங்கள்

கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.
English Meaning:
Pure Suddha Saivam (Jnana)They who transcended the nine spiritual Centres Verily saw God,
Whom the nine continents seek;
They saw the Continent beyond all continents
They, indeed, are the Pure Suddha Saivas.
Tamil Meaning:
பாரத வருடத்தின் ஒன்பது பகுதிகளையும் சென்று கண்டவரே அவைகளில் உள்ள சான்றோர் ஆராய்ந்துகண்ட அரிய உண்மையைக் கண்டவராவர். அதனால், அவர் எல்லாவற்றையும் உணர்ந்த இறைவனது நவந்தரு பேதங்களையும் உணர்ந்தோரும், பின்னர்க் கூறப்படும் கடுஞ்சுத்த சைவருக்கு நிகரானவரும் ஆவர்.Special Remark:
பாரத வருடத்தின் ஒன்பது கண்டங்களாவன:- `இந்திரம், கசேரு, தாமிரவர்ணி, கபத்தி, நாகம், சாந்திரம் காந்தருவம், வாருணம், குமரி` என்னும் பெயருடையவாகச் சொல்லப்படுகின்றன.`பரத கண்டமே `கடவுள் நிலம்` (புண்ணிய பூமி)` என்றும், `அது மேற் குறித்த ஒன்பது கண்டங்களையுடையது` என்றும் `அக் கண்டங்கள் அனைத்திலும் அரும்பொருளை - மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்ந்த `அறிவர்` பலர் நிரம்ப உளர்` என்றும் ஆகமங்கள் கூறுதலால், `அவை அனைத்திலும் தொண்டரொடு கூடிச் சென்று தூநீராடியும், தொழுதகு படிவங்களை வணங்கியும், அறிவரை அடி பணிந்து அரும் பொருள் கேட்டும் வருவோர் அசுத்த சைவராயினும் மெய்ப்பொருளைக் கண்ட சுத்த சைவர் எனச் சொல்லத்தக்க பெருமை யுடையவர்` என்றவாறு `பரத கண்டத்துக் கண்டங்கள் ஒன்பதுள்ளும் குமரிக் கண்டமே சிறந்தது` என்பதும் சிவாகம நூல் துணிபு. இரண் டாவதாய் நின்ற ``கண்டங்கள்``, இடவாகு பெயர். ``கண்ட`` எனப் பொதுப்படக்கூறிய அதனால், அது முழுதுங்கண்டதாயிற்று. இறைவனது பேதங்களை ``மாகண்டம்`` என்றார். அப்பேதங்கள் ஒன்பதும் மேலே கூறப்பட்டன.
இதனால், `சுத்த சைவரல்லாதார் தீர்த்த யாத்திரை தல யாத்திரைகளை இன்றியமையாது மேற்கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது, இதன் பயன் ஞானத்தைப் பெறுதலாகும்.
``மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே`` 1
என்ற தாயுமானவர் மொழி இங்கே நினைக்கத் தக்கது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage