
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
- ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை
- ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
- ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
- ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி
- ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்
- ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்
- ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
- ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
- ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்
- ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
Paadal
-
1. ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே. -
2. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற
நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.
-
3. கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.
-
4. வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.