ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
    மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
    மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
    மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே
  • 2. உலந்திலிர் பின்னும் `உளர் என நிற்பீர்
    நிலந்தரு நீர்தெளி ஊன்நவை செய்யப்
    புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக
    வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.
  • 3. கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
    வாயில்கொண் டாங்கே வநின் றருளுவர்
    தாயில்கொண் டாற்போல் தலைவன்என் னுட்புக
    ஆயில்கொண் டீசனும் ஆளவந் தானே.
  • 4. கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
    வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
    பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
    வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.