
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
பதிகங்கள்

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே
English Meaning:
Human form is Siva LingaThe Human Form is like Siva Lingam
The Human Form is like Chidambaram
The Human Form is like Sadasivam
The Human Form is like the Holy Dance, forsooth.
Tamil Meaning:
மக்களது உடம்புகள் யாவும் சிவலிங்க வடிவம்; சிதாகாச வடிவம்; சதாசிவ வடிவம்; திருக்கூத்து வடிவம்.Special Remark:
``வடிவு`` என்பவற்றை எல்லா அடிகளிலும் ஈற்றில் வைத்து உரைக்க. ``வடிவு`` என்றது, `அதன் மயம்` என்றபடி. இலிங்க மாதல் கூறுவார் பிறவாதலையும் உடன் கூறினார். அங்ஙனம் கூறவே, `ஊன் மயமாய்ச் சிறிதாய் நிற்கும் மானுட யாக்கை அருள் மயமான இலிங்கமாதல் எவ்வாறு` என்னும் ஐயத்திற்கு இடமில்லையாயிற்று. `இறைவன் எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாய் நிற்றலால், மானுட யாக்கை அவனது பொருள்கள் எல்லாமாய் விளங்கும்` என்பது கருத்து.வந்தி - வந்தித்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
இதனால், அண்டம்போலப் பிண்டமும் இலிங்கம் ஆதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage