
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
பதிகங்கள்

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் னுட்புக
ஆயில்கொண் டீசனும் ஆளவந் தானே.
English Meaning:
Lord is Master of the sense gates of bodyThe day the Lord entered this body tabernacle
The Five Senses who their places had taken
Opened the gates;
And showed you the way of redemption;
As like the mother`s home
He in me entered;
And taking charge of the gates, Master became.
Tamil Meaning:
உடம்பை இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டு அதன்கண் எழுந்தருளியவுடன், அதனைத் தங்கள் இல்லமாகக் கொண்டு வாழ்ந்து அதில் உள்ள உயிரை அலைக்கழித்து வந்த ஐம்புல வேடர், தம் நிலைமாறி, அந்த உடம்பு தானே அதில் உள்ள உயிர்க்கு உய்யும் வழியாக உடன்பட்டு, அவ்வுயிரின் வழிநின்று அதற்குத் துணைபுரிவர். அந்த முறையில்தான் அந்த ஐம்புல வேடரை அவர் குறும்பை அடக்கி ஆளுதற்குரிய தலைவனாகிய மனம் அவர் வழிப்படுதலை விட்டு என்வழிப்பட்டது. அதனால், `அந்த உடம்பாகிய இல்லத்தைச் சிவன் தன் இல்லமாக ஏற்றுக்கொண்டு என்னை ஆட்கொள்ளுதற்கு அதன்கண் வந்து வீற்றிருக்கின்றான்` என்று உணர்கின்றேன்.Special Remark:
முன் இரண்டடிகளில் பொது முறைமையைக் கூறி, அஃதே பற்றித் தாம் எய்திய பயனைப் பின் இரண்டடிகளில் விளக்கினார்.`கோயில் கொண்ட` - என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. இதில் உள்ள இறந்த காலம் எதிர்காலத்தது, `நாளைக் கூற்றுவன் வந்தான், என் செய்வை` என்பது போல ``வாயில்`` என்பதன் பின் ஆக்கச் சொல் வருவிக்க. இதன் பின் உள்ள கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல்; உடன்படுதல்.
``தாய் இல் கொண்டாற்போல்`` என்றது, `அயலார் மனைகளில் மாறி மாறிச் சென்று ஒதுக்கிருந்தவன், தன் முன்னோர் கட்டி வைத்துத் தனக்கு உரித்தாகிய இல்லத்தை அடைந்து நிலைத்தாற் போல` என்றபடி. அகரச் சுட்டுச் செய்யுளில் நீண்டு நின்றது; `அவ்வில்` என்றது, உடம்பாகிய இல்லத்தை.
இதனால், பிண்டலிங்க வழிபாட்டினால் புலன் அடக்கம் உண்டாக, இறையருள் கைகூடுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage