ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
    கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
    மேவிய கூறது ஆயிர மாயினால்
    ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.
  • 2. ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
    ஊனே சிறுமையி னுட்கலந் தங்குளன்
    வானோ ரறியும் அளவல்லன் மாதேவன்
    தானே அறியும் தவத்தின் அளவே.
  • 3. உண்டு தெளிவன் றுரைக்க வியோகமே
    கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
    பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
    கண்டு சிவன்உருக் கொள்வர் கருத்துளே.
  • 4. மாயா உபாதி வசத்தாகும் சேதனத்(து)
    ஆய குருஅரு ளாலே அதில் தூண்ட
    ஓயும் உபாதியோ டொன்றின்ஒன் றாதுயிர்
    ஆய துரியம் புகுந்தறி வாகவே.