
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 29. சீவன்
பதிகங்கள்

ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
ஊனே சிறுமையி னுட்கலந் தங்குளன்
வானோ ரறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.
English Meaning:
Siva`s Infinite SizeInfinite great is my Lord,
Yet within the littleness of this body
He dwells permeating;
He is the Lord Supreme
Whom the Celestials cannot know;
As much as your Tapas is
So much also is He known.
Tamil Meaning:
கட்புலனாகாப் பொருள் சிவன் ஒருவனேயாக, பலவாகிய உயிர்களையும் அத்தகைய பொருளாகக் கூறுதல் கூடுமோஎனின், கூடும். ஏனெனில், சிவனது பெருமையை நோக்கு மிடத்து ஏனைத் தேவர் அனைவர் பெருமையினும் பெரிது. ஆயினும் பருப்பொருளாகிய உடம்புகளில் சூக்குமமாய் நிறைந் திருக்கின்ற உயிர்களினுள்ளே அவற்றினும் அதிசூக்குமமாய் அவன் நிறைந் திருக்கின்றான். (எனவே, உயிர் சூக்குமப் பொருளும், சிவன் அதி சூக்குமப் பொருளுமாம் ஆதலின் அதுபற்றி ஐயமில்லை என்றபடி,) சிவன் இத்தகைய அதிசூக்குமப் பொருளாதலின் அவன் தேவர்களா லும் எளிதில் அறியத்தக்கவனல்லன். ஆயினும் அவனே அவரவரது தவத்தின் அளவை யறிந்து அவ்வளவிற்கு ஏற்ப விளங்கி நிற்பன்.Special Remark:
`ஏனோரினும்` - என ஐந்தாவது விரிக்க. ``ஊனே சிறுமை`` என்பதற்கு, `ஊனின்கண் உள்ள சூக்குமப் பொருள்` எனப் பொருள் கொள்க. அப்பொருள் உயிர்.இதனால், முன் மந்திரத்திற் கூறிய பொருள் பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage