ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
    கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும்
    மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும்
    காலங்கண் டான்அடி காணலும் ஆமே.
  • 2. ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
    மேதாதி நாதாந்த மீதாம் பராசத்தின்
    போதா லயத்து அவிகாரந் தனில்போதம்
    மேதாதி ஆதார மீதான உண்மையே.
  • 3. மேலென்றும் கீழென் றிரண்டறக் காணுங்கால்
    தானென்றும் நானென்றும் தன்மைகள் ஓராறும்
    பாரெங்கு மாகிப் பரந்த பராபரன்
    காரொன்று கற்பக மாகிநின் றானே.
  • 4. ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
    மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
    போதா லயத்துப் புலன்கரணம் புந்தி
    சாதா ரணம்கெட்டாற் றான்சக மார்க்கமே.
  • 5. மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி
    ஆதார சோதனை அத்துவ சோதனை
    தாதார மாகவே தான்எழச் சாதித்தால்
    ஆதாரம் செய்போக மாவது காயமே.
  • 6. ஆறந் தமும்கூடி ஆகும் உடம்பினில்
    கூறிய ஆதாரம் மற்றுங் குறிக்கொண்மின்
    ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
    ஊறிய ஆதாரத் தோரெழுத் தாமே.
  • 7. ஆகும் உடம்பும் அகின்ற அவ்வுடல்
    போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
    ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
    ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.
  • 8. ஆய மலர்இன் அணிமலர் மேலது
    வாய இதழும் பதினாறும் அங்குள
    தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
    மேய அறிவாய் விளைந்தது தானே.