
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
பதிகங்கள்

மேலென்றும் கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்றும் நானென்றும் தன்மைகள் ஓராறும்
பாரெங்கு மாகிப் பரந்த பராபரன்
காரொன்று கற்பக மாகிநின் றானே.
English Meaning:
Parapara pervades all the Six AdharasWhen thus through Adharas
You course Prana breath
Neither Up nor Down do you know
Neither He nor I do you cognise
The mighty Parapara that pervades all Envelops you,
Bounteous as the celestial Kalpaka tree. *
Tamil Meaning:
நிராதாரத்தையும் கடந்து மீதானத்தில் பாரசத்தியைத் தலைப்பட்ட வழி ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வு எய்தப் பெறும். அவ்வுணர்விலே சருவ வியாபகனாகி சிவன் இனிது விளங்கித் தனது எல்லையில் இன்பத்தை இனிது வழங்கி நிற்பன்.Special Remark:
``கீழென்று`` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க. ``இரண்டறக் காணுங்கால்`` - என்பதை ``நானென்றும்`` என்பதன் பின்னர்க் கூட்டிப் பொருள் கொள்க. ``தன்மைகள்`` - என்றது, ஆதார நிராதாரங்களில் நிகழ்ந்த அனுபவங்களை, ``கார் ஒன்று`` - என்பதில் `ஒன்று` உவம உருபு. கார் - மேகம். கற்பகத் தருவை, `கார் போலும் கற்பகம்` எனச் சிறப்பிக்கும் முகத்தால் `கார்போலவும், கற்பகம் போலவும் நிற்பான்` - எனக் குறித்தார். ``கார் ஒன்றோ` - எனப் பாடம் ஓதி, `ஒன்றோ` - என்பதை `எண்ணிடைச் சொல்` என உரைப்பினும் பொருந்தும், ``ஆகி நின்றான்`` - என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆள்வாரிலி மா டாவேனோ``(தி.8 கோயில் மூத்த திருப்பதிகம், 7) - என்பதிற் போல `நின்றான்`` - என எதிர்காலம் தெளிவு பற்றி இறந்தகாலமாகக் கூறப்பட்டது. இம்மந்திரமும் மேல் உள்ள மந்திரம் போல உயிரெதுகை பெற்று வந்தது.இதனால் பிராசாத யோக முடிநிலைப் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage