
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
பதிகங்கள்

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.
English Meaning:
The Six Adharas and their petalsPiercing the Chakras* that are petalled
Four, Six, Ten and Twelve
And the Six and Ten still above;
Lo! Behold then the Twin petalled Centre finale;
You have indeed beheld the Holy Feet of the Timeless One.
Tamil Meaning:
ஆறு ஆதாரங்களுள் மூலாதாரம் முதலிய ஐந்தனையும் முதலில் நன்கு தரிசித்து, அதன்பின் ஆறாவதாய் உள்ள ஆஞ்ஞையைத் தரிசிக்கும் பொழுது சிவனது திருவடியைத் தரிசித்தல் கூடும்.Special Remark:
``நாலு`` முதலாகக் கூறப்பட்டவை ஆதார தாமரைகளை அவற்றின் இதழ் எண்ணாற் கூறியனவாம். ``முதல்`` என்பது `தலைமை` என்னும் பொருட்டாய் ஆஞ்ஞை ஆதாரத்தை உணர்த்திற்று. `முதல் இரண்டும்`` - என்பதன்பின் `காண` என ஒரு சொல் வருவித்து, அதனை ``மூலம் கண்டாங்கே`` என்பதற்கு முடிவாக் குக. `மூலம் கண்டவாறே காண்க` என்பதனால் மூலாதாரத்தை முதலில் கண்டமை அநுவாத முகத்தாற் கூறப்பட்டது. கோல், முதுகந் தண்டு. அதன்மேல் உள்ளது விசுத்தி.இதனால் ஆதார யோகத்தின் இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage