
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
பதிகங்கள்

மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதார மாகவே தான்எழச் சாதித்தால்
ஆதாரம் செய்போக மாவது காயமே.
English Meaning:
Ascending further above Six AdharasThere you stop not — at Medha`s Centre —
But evoke Aum,
And beyond Adharas now proceed
And ascend the Adhvas* with Prana for support
When thus you practise, to perfection`s end,
Your body becomes a doughty receptacle
Of Joy Eternal.
Tamil Meaning:
மோதாதி கலைகளின் வழியே பிரணவ நினைவை இடைவிடாது வளர்த்து, அதனாலே ஆதார சோதனை அத்துவ சோதனைகளைச் செய்தால், உணர்வு மிகுதலே யன்றி, உடம்பும் விரைவில் வீழ்ந்தொழியாது சீவபோகத்தைத் தலைப்படுதற்குத் துணையாய் நெடிது நிற்கும்.Special Remark:
`சோதனை` எனினும், `சுத்தி` எனினும் ஒக்கும். பிராசாத யோகத் தானங்களில் ஆறத்துவாக்களும் அடங்கி நிற்கும் முறையைப் பிராசாத நூல்களிற் காண்க. தாதாரம் ஆக - அதுவே பற்றுக் கோடாக, தான் - ஆன்மா. அஃது எழுச்சி பெறுதல் உணர்வினாலேயாகலின் அவ்வுணர்வினது எழுச்சியை ஆன்மாவின் எழுச்சியாகக் கூறினார். `காயம் போகம் செய் ஆதாரம் ஆவது` - என மாற்றிக் கொள்க. போகம் - சிவபோகம்.இதனால், `பிராசாத யோகம் ஏனை யோகப் பயன்களையும் தரும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage