ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
    பற்றும் பரோபாதி ஏழும் பகர்உரை
    உற்றிடும் காரணம் காரியத் தோடற
    அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.
  • 2. ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
    வேறாய் நினைவு மிகுத்த நனா கனா
    ஆறா றகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
    பேறாம் நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.
  • 3. உயிர்க்குயி ராகி ஒழிவற் றழிவற்(று)
    அயிர்ப்பறு காரணோ பாதிவெதி ரேசத்து
    உயிர்ப்புறும் ஈசன் உபமித்தா லன்றி
    வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாதே.
  • 4. காரியம் ஏழில் கரக்கும் கடும்பசு
    காரணம் ஏழில் கரக்கும் பரசிவன்
    காரிய காரணம் கற்பனை சொற்பதப்
    பாரறு பாழில் பராற்பரந் தானே.