
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
பதிகங்கள்

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர்உரை
உற்றிடும் காரணம் காரியத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.
English Meaning:
Transcend All Experiences, Caused and CausalWhen Caused Experiences Seven of Jiva
And Causal Experiences Seven of Para Leave,
Cause and Caused Difference vanish,
Then Jiva becomes Siva for sure.
Tamil Meaning:
முன்அதிகாரத் தொடக்கத்தில்l `காரிய தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, சீவஉபாதி` என்றும், `காரண தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, `பரோபாதி` என்றும் கூறப்பட்டன. இங்கு, `பரம்` என்பது, பரம் பொருளைக் குறியாமல், `சீவ உபாதிக்கு மேலே உள்ளவை` எனப் பொருள் தந்தது. `இவ்விருவகை உபாதிகளும் நீங்கினால் காரியம் காரணத்தோடு அற்றுவிட்டதாகும். அங்ஙனம் அவை அற்று விட்டதால், `அணு` எனப்பட்ட உயிர் அவ்வணுத்தன்மை நீங்கி, வியாபகப் பொருளாகிய சிவத்தை அடைந்து தனது வியாபக நிலையைப் பெற்று இன்புறும்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.Special Remark:
அற அறுதல் - முற்றும் நீங்குதல். இரண்டாம் அடியிலும் ``ஏழும்`` என்பதன் பின்னும் `அற` என்பது வருவிக்க. ``காரியம், காரணம்`` என்பன நிரல் நிறையாய் மேற்கூறிய `சீவ உபாதி, பரோ பாதி, என்பவற்றோடு இயைந்தன. பின்னர் ``அணு வருதலால், அச் சிவம்`` என்னும் சுட்டு `வியாபகச் சிவம்` என அதன் வியாபகத்தைச் சுட்டிற்றாம். `அணு வியாபகம் ஆகும்` என்றதனால், `அணுத்தன்மை உயிர்க்குச் செயற்கையால் வந்தது என்பதும், `வியாபகமே அவனது இயற்கை` என்பதும் பெறப்பட்டன. செயற்கை, ஆணவ மலம்.இதனால், உயிர் செயற்கையின் நீங்கி இயற்கையை எய்துதற்குத் தடையாய் உள்ளவை உபாதிகள்` என்பதும், அவை, `காரிய உபாதி, காரண உபாதி` என இருவகையினவாம் என்பதும் கூறப்பட்டன.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``அகராம் உயிரே; உகாரம் பரமே`` என்னும் மந்திரம் மேல் நான்காம் தந்திரத்தில், `திருவம் பலச் சக்கரம்` அதிகாரத்தில்* சிறிது வேறுபாட்டுடன் வந்ததேயாகும் இவ்வதிகாரத்தில் அதற்கு இயைபில்லை.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage