
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
பதிகங்கள்

உயிர்க்குயி ராகி ஒழிவற் றழிவற்(று)
அயிர்ப்பறு காரணோ பாதிவெதி ரேசத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமித்தா லன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாதே.
English Meaning:
Anava (I-ness) leaves only By GraceAs Life of life,
Interminable and imperishable
Beyond travails of Causal Experiences
And Caused Experience opposite,
Is Isa (Siva) vibrant;
Without His Grace abounding,
Anava that makes Jiva tremble
Never, never, leaves.
Tamil Meaning:
எல்லா உயிர்களிலும் அவற்றிற்கு உயிராய், ஒரு ஞான்றும் விட்டு நீங்காது, அழிவின்றியிருப்பினும் உயிர்கள் முன் மந்திரத்தில் கூறிய உபாதிகள் அனைத்தினின்றும் நீங்கிய பின்பே முன்பு பாலில் நெய்போல விளங்காதிருந்த நிலையினின்றும் நீங்கித் தயிரில் நெய்போல வெளிப்பட்டு விளங்குகின்ற சிவன் அவ்வாறு வெளிப்பட்டாலன்றி யாதோர் உயிர்க்கும் துன்பத்தைத் தருகின்ற ஆணவ மலம் நீங்குதல் உண்டாகாது.Special Remark:
`உயிர்கட்கு உள்ள உபாதிகளில் மூல உபாதி ஆணவ மலமே யாதலின், முன் மந்திரத்தில் மாயேயங்களாகிய ஆறாறும் நீங்கியபின் உயிர்தொம்பதமாம் - என்றது என்னை` என்னும் ஐயத்தை நீக்குதற்கு இது கூறினார். ஆணவத்தை நீக்க வேண்டியே மாயேயங்கள் சேர்க்கப்பட்டமையால். `அவை நீங்க` என்றமையால், `அவற்றிற்குக் காரணமான ஆணவம் நீங்கினமை தானே பெறப்படும் என்றபடி. அயிர்ப்பு - ஐயம். வெதிரேகம் - எதிர்மறை; அது முன்னை நிலைக்கு மாறாய் அமையும் நிலையைக் குறித்தது. உயிர்த்தல், இங்கு விளங்குதல் உபமித்தல் - உடனாதல். இதுவும் அந்நிலை விளங்குதலையே குறித்தது. `ஒளியாலல்லது இருள் நீங்காதவாறு போல், சிவம் பிரகாசித்தா லல்லது ஆணவ மலம் நீங்காது என்பதாம். `மாயேயங்களாகிய உபாதிகள் நீங்கினவிடத்தே பிரகாசிப்பவன் சிவன்` என்றதனால், மாயேயங்கள் நீங்கினவிடத்துச் சிவம் பிரகாசித்தலால் ஆணவ மலம் நீங்கிற்றாம்` எனக் கூறற் பாலதனை வலியுறுத்தற் பொருட்டு `உபமித்தாலன்றி ஆணவம் வீடல் செய்யாது` என எதிர்மறை முகத்தாற் கூறினார்.இதனால், `ஆதியாய உபாதி நீங்குங்கால், அநாதியாய உபாதி நீங்கியேவிடும்` என ஐயம் அறுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage