
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
பதிகங்கள்

காரியம் ஏழில் கரக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கரக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறு பாழில் பராற்பரந் தானே.
English Meaning:
Paraparan is in Space Beyond ExperiencesImmanent is Jiva in Caused Experiences Seven,
Immanent is Parasiva in Causal Experiences Seven;
In the Void that defies Cause-Caused description,
Beyond Thought and Word.
Is Paraparan.
Tamil Meaning:
`காரிய உபாதி` எனமேற் கூறப்பட்ட உபாதிகள் உள்ள பொழுது, உயிர் தன்னையே அறியாது மயங்கும். காரிய உபாதிகள் நீங்கக் காரண உபாதிகள் நீங்காதிருக்குமாயின் உயிர் தன்னை ஒருவாறு அறியினும் தலைவனை அறியாது மயங்கும். இக்காரிய காரண உபாதிகள் உயிர்கட்கு ஆக்கி வைக்கப்பட்டவை. இன்னும் இவ்வுபாதிகள் பலவாகச் சொல்லப்படுகின்ற பதங்களாகிய உலகங்களைச் சார்ந்து நிற்பனவாம். இவையெல்லாம் அற்ற நிலையே `வெறும் பாழ்` எனப்படுகின்றது. அவ்விடத்தில் தான் மேலானவற்றிற்கெல்லாம் மேலான பரம் பொருள் உள்ளது.Special Remark:
`உயிர் அந்த வெறும்பாழை அடைந்து தான் பரம் பொரூளை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. `கலக்கும்` என்பன பாடம் அல்ல. கடும்பசு - மலத்தால் மிக மூடப்பட்ட பசு; என்றது, சகலவருக்கத்து உயிரை - காரிய காரணம், உம்மைத் தொகை. ``கற்பனை`` என்றது, ஆக்கப்பாட்டினை. பதம் - பதவி. பார் - உலகம். ஏகாரம், பிரிநிலை. அதனைப் பிரித்து, ``பாழ்`` என்பதனோடு மாறிக்கூட்டி, `பாழிலேதான் பராற்பரம்` என்க. தான் கட்டுரைச் சுவைபட வந்தது. `உள்ளது` என்பது சொல்லெச்சம்.இதனால், `உபாதிகள் எல்லாம் நீங்கின இடமே உயிர் அடையத் தக்க இடம்` என்பது கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage